அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், செவ்வாய் இரவு கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வரும் நிலையல் சிகப்பு நாடாக கலிபோர்னியா மாறியுள்ளதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான தீயால் கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. இந்த காட்டுதீ காரணமாக ஏராளமான வீடுகள், வாகனங்கள் வீட்டில் இருந்த உடைமைகள் என அனைத்து சேதமடைந்துள்ளதாக குடியிருப்பை விட்டு உயிர் பயத்தில் தப்பித்த குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்தனர்.
காட்டுத் தீ காரணமாக 10க்கும மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்தில் தீயை அணைத்து வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீ பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் – கவுண்டியில், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
காட்டுத்தீயில் பல கட்டமைப்புகள் அழிந்துள்ளதாக என்றும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 13 ஆயிரம் கட்டிடங்கள் அபாயகரமாக உள்ளதாகவும் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் தெரிவித்தார். காற்றின் வேகம் தொடர்ந்து வேகமாகி வருவதால் தீ வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவும் அபோயம் ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது.