கைகோர்க்கும் வங்கதேசம் – பாகிஸ்தான்…!
இந்தியாவை குறி வைக்கும் இருநாடுகள்…!
ஈடு கொடுக்குமா இந்தியா…?
இந்தாண்டின் மத்தியில் வங்கதேசத்தில் ஏற்பட்ட அதிகார மாற்றத்திற்கு பிறகு அங்கு இடைக்கால அரசு தோன்றியது. இந்த இடைக்கால அரசுடன் தற்போது பாகிஸ்தான் நல்ல உறவை கண்டு வருகிறது. வங்கதேசம், பாகிஸ்தானுடனான தன் உறவுகளில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையிலான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்முதற்கட்டமாக, பாகிஸ்தான் வாழ் மக்களுக்கு விசா வழங்குவதற்குத் தேவையான கட்டாய பாதுகாப்பு சோதனை விதி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
அந்த வகையில், பாகிஸ்தான் வாழ் மக்களுக்கு விசா நடைமுறை எளிமையாக்கப்படும் என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தற்போது அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் மக்களுக்கும், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும் விசா வழங்கப்படும் என்று வங்க தேச அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி கடந்த செம்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான், வங்கதேச குடிமக்களுக்கான விசா கட்டணத்தையும் தள்ளுபடி செய்ததோடு, விசா நடைமுறையையும் எளிதாக்கியுள்ளது.
இது மட்டுமின்றி, 2019 ஆம் ஆண்டு ஷேக் ஆசினா அரசு இருந்த நேரத்தில் வங்கதேசத்திற்கு விசா கோரும் அனைத்து பாகிஸ்தானிய குடிமக்களுக்கும் வங்கதேசத்தின் பாதுகாப்பு சேவைப் பிரிவிலிருந்து பாதுகாப்பு அனுமதி பெறுவதை கட்டாயமாக்கியிருந்தது.இந்த விதியையும் வங்க தேச இடைக்கால அரசு நீக்கியது.இப்படி விசா நடைமுறையில் பல மற்றங்களை கொண்டு வந்திருப்பது பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பதை குறிக்கும் வகையில் வங்கதேச அரசு செயல்பட்டு வருகிறது.
விசா விதிமுறைகளில் மாற்றம் ஒரு பக்கம் இருந்து வரும்நிலையில், பாகிஸ்தானிடமிருந்து குண்டுகளை வாங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் வங்க தேசம் கையெழுத்திட்டுள்ளது. இதுமட்டுமினறி 50 ஆண்டுகளுக்குப் பிறகு இருநாடுகளுக்கும் இடையே கடல் வழி வர்த்தகமும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக பாக். சரக்கு கப்பல் ஒன்று சிட்டகாங் துறைமுகத்திற்கு சென்றுள்ளது. மேலும் 25 ஆயிரம் டன் சர்க்கரையை பாகிஸ்தானிடமிருந்து வாங்கவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா தான் வங்க தேசத்திற்கு சர்க்கரை இறக்குமதி செய்து வந்த நிலையில் தற்போது பாகிஸ்தானிடம் ஒப்பந்தம் செய்துள்ளது இந்தியா- வங்க தேசத்திற்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஷேக் அசினா ஆட்சியின் போது இந்தியாவுக்கு ஆதரவாக வங்க தேசம் இருந்த நிலையில், தற்போது இடைக்கால அரசின் நடவடிக்கை இந்தியாவை உற்று நோக்க வைத்துள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, அந்த நாட்டின் அரசியல் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதாகவே கூறப்படுகிறது. இவ்வளவு நாள் இந்தியாவை சார்ந்திருந்த வங்க தேசம் தற்போது அதன் வீரியத்தை குறைத்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா இதற்கு கவலை கொள்ள தேவையில்லை என ஆய்வாளர்கள் கருத்துகூறி வருகின்றனர்.
வங்கதேசமும்- பாகிஸ்தானும் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அது எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தெரியாது என்றும் உண்மையில் இருநாடுகளிடையே இருக்கும் உறவு
ஒரு தற்காலிகமானது தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் வங்கதேசத்தில் இஸ்லாமிய சித்தாந்தம் வலு பெற்று வருவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ங்கதேசம் பாகிஸ்தானை நெருங்குவது இந்தியாவுக்கு பல நிலைகளில் நிச்சயம் சவால்களை உருவாக்கும்.
இது ஒருபுறம் இருக்க வங்க தேச அரசுக்கு நெருக்கடி அல்லது அரசியலமைப்பு நெருக்கடியை வரும் போது தான் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய சித்தாந்தத்துடன் வங்கதேசம் நெருக்கமாகத் தோன்ற முயன்று வருகிறது. வங்கதேசத்தில் மதச்சார்பற்ற சக்திகளும் உள்ளன. அங்கு இஸ்லாமிய சித்தாந்தம் வலுவடைகிறதா அல்லது மதச்சார்பற்ற சித்தாந்தம் வலுவடைகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,”