அமெரிக்காவால் வெளிச்சத்திற்கு வந்த அதானி ஊழல்…
நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?
இந்தியாவில் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களில் பல்லாயிரம் கோடி லஞ்சம் ஊழல் செய்து சிக்கியுள்ள தொழிபதிபர் அதானி வசமாக சிக்கியுள்ளார் . அவரின் அப்பட்டமான ஊழல் மற்றும் லஞ்சம் வழங்கியது தொடர்பாக அதானியின் குட்டு வெளிப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்தியாவில் அதானிக்கு எதிரான வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு, அயலுறவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களை மீறி, முதலீட்டாளர்களை சுமார் 6 ஆயிரத்து300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததோடு மட்டுமின்றி இதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 2 ஆயிரத்து 29 கோடி அளவிற்கு லஞ்சம் கொடுத்தாக கூறப்படும் குற்றச்சாட்டில் அதானி நிறுவனம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக ஆதாரங்களோடு அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு பெறுவதற்காகவும், அதன் மூலமாக கிடைக்கவுள்ள16 ஆயிரத்து800 கோடி ரூபாய் அளவுக்கு கிடைக்கும் லாப பலனுக்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, அதுமட்டுமின்றி சட்டங்களை மீறி முறைகேடாக மூலதனத்தை திரட்டியது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அதானி குழுமத்தின் தலைவராக உள்ள கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட பலர் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்காக அதானி குழுமமானது தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்திய பிரதமர் மோடி அரசின் நிர்ப்பந்தத்தினால் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி நிறுவனம் இதன்மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியா உள்பட பல வங்கிகளும் இந்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பரவிய நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டையடுத்து பல நாடுகளும் அதானி நிறுவனத்துடனான தனது வியாபார ஒப்பந்தங்களை திரும்ப பெற்றுள்ளது.
ஏற்கனவே SEBI விதிகளை ஏமாற்றியது, பங்குச்சந்தையில் தனது மதிப்பை போலித்தனமாக அதிகரித்துக் கொண்டது, மாநில மின்வாரியங்களுக்கு தரமற்ற நிலக்கரியை வழங்கி இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியது என பல்வேறு சட்ட விரோத முறைகேடுகளில் அதானி ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது மீண்டும் பெரும் ஊழல் செய்து அதற்காக லஞ்சம் கொடுத்தது தொடர்பாக கவுதம் அதானி உட்பட பலர் சிக்கியுள்ளனர்.
இதுபுறம் இருக்க வழக்கம் போல் சட்ட ஓட்டைகளில் இருந்து தப்பிவிடாமல் இருக்க சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல கட்சிகள் ஒருமித்த குரலை எழுப்பி வருகின்றனர்.கவுதம் அதானி அவரது மருமகன் உட்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி வெளிப்படையான புலன் விசாரணை நடத்த வேண்டும் என்ற கூக்குரல் அகதிகரித்துள்ளது. கவுதம் அதானி மீதான அனைவரின் எதிர்ப்புக்கு இந்திய அரசு பணிந்து நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.