நெதன் யாகு மீது சீரிய ஈரான் உச்சப்பட்ட தலைவர்…
வாரண்ட் மட்டும் அவருக்கு போதாது….
இஸ்ரேல் – ஹாமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, நெதன் யாகுவை கைது செய்வது மட்டும் போதாது அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் அப்போது தான் போரில் உயிரிழந்தவர்களின் ஆத்மா நிம்மதியடையும் என ஈரான் உச்சப்பட்ட தலைவரான அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
எலியும்-பூனையுமாக காணப்படும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் பிரச்சனை விபரீதமாக மாற கடந்த ஆண்டு முதல் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது போதாது என்று இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்றதோடு மட்டுமின்றி பலரை பனைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனாலும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வாயிலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படிசென்று கொண்டிருக்கும் நிலையில் அப்பாவி பாலஸ்மீன மக்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என ஹாமஸ் கடும் கண்டனத்தை பதவி செய்தது,.மேலும், பொதுமக்கள் கொல்லப்படுவது ஒரு புறம் என்றால் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது.
இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 700 குழந்தைகள் உட்பட சுமார் 42 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலண்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது தயிப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, யோ காலண்ட், முஹம்மது தயீப், இப்ராஹீம் அல் மஸ்ரி ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. இதற்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அதனை சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.
ஈரானின் துணை ராணுவப்படையின் தன்னார்வப் பிரிவான பாசிஸ் வீரர்களுடன் பேசிய அவர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் உச்சப்பட்ட தலைவராக இருக்கும், அயத்துல்லா அலி கமேனி காட்டமாக தெரிவித்துள்ளார்.
கமேனியின் இந்த பேச்சு தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.