லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஐந்து ராக்கெட்டுகள் துறைமுக நகரமான ஹைஃபாவை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒரு உணவகம், வீடு மற்றும் பிரதான வீதி ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு நகரமான திபெரியாஸிலும் சைரன்கள் ஒலித்தன.
அப்பர் கலிலி பகுதியில் 15 ராக்கெட்டுகளை கண்டறிந்த பின்னர் எச்சரிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. அவற்றில் “சில” இடைமறிக்கப்பட்டது.