மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பங்கேற்போடு அக்டோபர் ௦௨ ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
இதனை அடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வுக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.