இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இனவழிப்பு தொடர்பில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டித்திருந்தனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டித்திருந்தனர்.
இதன்படி, கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அண்மையில் ஒன்று கூடி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவுகூர்ந்தனர்.
இந்த நிகழ்வு ஆல்பர்ட் கேம்பல் சதுக்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்துகொண்டதுடன், கனடா மற்றும் சர்வதேச நாடுகளிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.
1. தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் தீர்வு நீதி.
2. தமிழ் மக்களை ஒரு தேசமாகவும் அவர்களின் சுயநிர்ணய உரிமையாகவும் அங்கீகரித்தல்.
3. வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை.
4. அரச அனுசரணையுடன் புத்தமயமாக்கல், குடியேற்றம், இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல் மற்றும் நில அபகரிப்புகளை நிறுத்துங்கள்.
5. தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் பூர்வீக தாயகத்திலிருந்து ஆயுதப்படைகளை அகற்றி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.