பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 2000 பேர் வரையில் மண்ணில் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து சுமார் 600 கிமீ தொலைவில் உள்ள மாகாணத்தின் முலிடாகா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவினால் ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்தில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், உணவுத் தோட்டங்கள் மற்றும் நீர் விநியோகங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, நிலச்சரிவில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மண்ணில் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள், உணவு தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதார வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக” தேசிய பேரிடர் மையத்தின் அதிகாரி ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.