
Zürich தமிழ் புத்தக விழா எதிர்வரும் ஜூன் 1ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் காலை 10.30 முதல் மாலை 7 மணி வரை Zürich தமிழ் புத்தக விழா திறந்திருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழின் 500க்கும் மேற்பட்ட நூல்கள், முக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், ஈழம், புகலிடம், தமிழக நூல்களுடன் சிறுவர் நூல்களையும்
தமிழ் புத்தக விழாவில் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நினழ்வுக்கு இணைவாக நூல் வெளியீடுகள் உரைகள் கலந்துரையாடல்கள் கவிதா நிகழ்வுகள் சந்திப்புக்கள் உள்ளிட்ட இன்னும் பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. தமிழ் வாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக இந்த புத்தக விழா அமைகிறது.
Zürich தமிழ் புத்தக விழாவை EXPERITHEATER ஏற்பாடு செய்துள்ளது.
தவறவிடாமல் இந்ந அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு சுவிட்சர்லாந்து வாழ் மக்களுக்கு அன்போடு அழைப்புவிடுப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழிடம் :
Quartierräume Bullinger
Bullingerstrasse 9
8004 Zürich
தொடர்புகளுக்கு : 078 927 47 95