காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என இமேனுவல் மெக்ரோன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மனிதாபிமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
காஸாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரான்ஸ் ஜோர்தானுடன் இணைந்து பணியாற்றும் எனவும் மெக்ரோன் கூறியுள்ளார்.
ஹமாஸ் போராளிகள் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அந்த அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் ஆரம்பித்தது.
இந்த நிலையில், காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி நிலைமை குறித்தும்,அங்கு சாதாரண மக்கள் போரில் கொல்லப்படுவது தொடர்பாகவும் தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக மெக்ரோன் தெரிவித்துள்ளார்.