உகண்டாவிடம் 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த சிம்பாப்வே அணி அடுத்த ஆண்டு நடைபெறும் ரி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதில் நெருக்கடியை சந்தித்துள்ளது.
நமீபியாவில் நடைபெற்று வரும் ரி20 உலகக் கிண்ணத்திற்கான ஆபிரிக்க பிராந்திய தகுதிகாண் சுற்றில் விளையாடும் சிம்பாப்வே நேற்று முன்தினம் (26) நடந்த போட்டியில் உகண்டாவிடம் தோல்வியை சந்தித்ததன் மூலம் 3 போட்டிகளில் 2இல் தோற்று புள்ளிப் பட்டியலில் 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் என்ற நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்றிருக்கும் ஒரே டெஸ்ட் விளையாடும் நாடான சிம்பாப்வே அந்த இலக்கை எட்டுவதில் சவாலை சந்தித்துள்ளது.
தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களிலும் முறையே நமீபியா மற்றும் கென்ய அணிகள் உள்ளன.