300 ஃபெராரி, 500 ரோல்ஸ் ராய்ஸ், 450 மெர்சிடிஸ் சொகுசு கார்களுடன் 1700 அறைகள் கொண்ட அரண்மனையை புருனே சுல்தான் ஹசனல் போல்கியா வைத்திருக்கிறார்.
இன்பம்-துக்கம், பகல்-இரவு, வெற்றி-இழப்பு, செல்வம் மற்றும் வறுமை போன்றவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒருபுறம், ஒருவேளை உணவுக்காக இரண்டு வேளையும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் தொடர்பான செய்திகளைப் பார்க்கிறோம். மறுபுறம், மக்கள் அபரிமிதமான செல்வத்தையும் ஆடம்பரங்களையும் அனுபவிப்பது தொடர்பான செய்திகளையும் படிக்கிறோம். அந்த வகையில் புருனேயைச் சேர்ந்த சுல்தான் ஹசனல் போல்கியா உச்ச கட்ட ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார், அவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.
புருனே ஒரு ஆசிய நாடு, இது மலேசியா மற்றும் தென் சீனக் கடலால் சூழப்பட்டுள்ளது. இது ஒரு தீவு நாடு, அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் மழைக்காடுகள் உலகம் முழுவதும் பிரபலமானது. உலக வங்கிக் குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் மக்கள் தொகை 4.45 லட்சம் மட்டுமே. இது இந்தியாவின் நொய்டாவை விட மிகக் குறைவு. ஆனால், இந்த சிறிய நாட்டின் சுல்தான் உலகின் பணக்கார மன்னராக கருதப்படுகிறார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
கின்னஸ் புத்தகத்தில் புருனே சுல்தான்
புருனே சுல்தானின் பெயர் அவரது ஆடம்பர வாழ்க்கைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அவரிடம் சுமார் ரூ. 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் மட்டுமே உள்ளன. சுல்தானின் கார் கலெக்சனில் ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன. சுல்தானிடம் சுமார் 300 ஃபெராரி மற்றும் 500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் 1990 ஆம் ஆண்டிலேயே வாங்கப்பட்டவை.
கார் கலெக்சன்
இது தவிர பென்ட்லி உள்ளிட்ட பிற சொகுசு கார்களின் கலெக்ஷனும் இவரது ஷோரூமில் உள்ளது. மேலும் 250 க்கும் மேற்பட்ட லம்போர்கினி, 250 க்கும் மேற்பட்ட ஆஸ்டன் மார்டின், 170 க்கும் மேற்பட்ட டுகாட்டி, 230 க்கும் மேற்பட்ட போர்ச், 350 பென்ட்லிகள், 440 மெர்சிடிஸ், 260 க்கும் மேற்பட்ட ஆடி கார்கள், 230 க்கும் மேற்பட்ட BMW மற்றும் 220 க்கும் மேற்பட்ட ஜாகுவார், 180 லேண்ட் ரோவர் கார்கள் சுல்தானிடம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில்தான் இவரது பெயர் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.
கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு புருனே சுல்தானின் வாழ்க்கை உச்ச கட்ட ஆடம்பரத்தில் சென்று கொண்டிருக்கிறது. அவர் 1984 ஆம் ஆண்டில் புருனேயின் அரியணையை ஏற்றுக்கொண்டார், அதன் பிறகு இப்போது வரை அவர் பிரதமர் மற்றும் சுல்தான் பதவியில் இருந்து வருகிறார். சுல்தானின் அரண்மனையின் அழகும் பார்க்கத் தக்கது. அவரது அரண்மனையில் 5 நீச்சல் குளங்கள், 1,700 அறைகள், 200 குளிரூட்டப்பட்ட ஹால்கள், 300 ஃபெராரிகள், 500 ரோல்ஸ் ராய்ஸ்கள் மற்றும் 100 கேரேஜ்கள் உள்ளன.
புருனே சுல்தானிடம் தங்கம் பதித்த தனியார் ஜெட் விமானம் இருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும் என்கிறார்கள். இந்த விமானத்தின் உள்ளே இருக்கும் வாஷ் பேசின் கூட தங்கத்தால் ஆனது. விமானத்தில் ரூ.950 கோடிக்கு மேல் ஆடம்பர பொருட்கள் உள்ளன. இது மட்டுமின்றி, சுல்தானின் அரண்மனையான இஸ்தானா நூருல் ஈமான் அரண்மனையின் மாடம் 22 காரட் தங்கத்தால் ஆனது. இதன் மதிப்பு சுமார் ரூ.2,550 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, சுல்தானிடம் ரூ.92 கோடி மதிப்புள்ள வைரங்களும் உள்ளன. சுல்தானின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.88 லட்சம் கோடி என கூறப்படுகிறது. புருனேயின் அரண்மனை சுமார் 20 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
www.geneva24news.com
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.