காசாவில் பொது மக்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீதான இஸ்ரேலின் நேற்றைய தாக்குதலின் போது சுமார் 45 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியது.
மேலும் 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ரஃபா மீதான இந்த தாக்குதல் துரதிஷ்டவசமான விபத்து என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நெதன்யாகு,
‘‘ரஃபாவில் நாங்கள் ஏற்கனவே ஒரு மில்லியன் குடியிருப்பாளர்களை வெளியேற்றிவிட்டோம், மேலும் போராளிகள் அல்லாதவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருக்க முயற்சி செய்த போதிலும், துரதி~;டவசமாக தவறுதல் இடம்பெற்று விட்டது” என கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து 36,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 80,000 கடந்தது.