ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரின் இறுதிக்கிரியைகளை நாளை காலை 9:30 க்கு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ஈரான் ராணுவ தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக ISNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவர் மற்றும் அவரது பரிவாரங்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் வீரமரணம் அடைந்திருப்பதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. . ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஈரானில் ஐந்து நாட்களுக்கு தேசிய துக்க தினத்தையும் அறிவித்திருக்கிறார்.
ஈரானின் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஏனையோரது பெயர் பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதனடிப்படையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் Hossein Amirabdollahian, ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநர் Malik Rahmati, கிழக்கு அஜர்பைஜானுக்கான ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதி Ayatollah Mohammad Ali Al-Hashem, ரைசியின் காவலர் குழுவின் தலைவர் Sardar Seyed Mehdi Mousavi, ஹெலிகாப்டரின் பைலட் கர்னல் Seyed Taher Mostafavi, ஹெலிகாப்டரின் பைலட் துணை விமானி கர்னல் Mohsen Daryanush, விமான தொழில்நுட்ப வல்லுநர் மேஜர் Behrouz Ghadimi ஆகியோரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விழுந்தபோது ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி – நாட்டின் வெளியுறவு அமைச்சர் – மற்றும் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் உட்பட மொத்தம் ஒன்பது பேரும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இறந்து கிடந்ததாதாகவும் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் தப்ரிஸின் தியாகிகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இறந்த உடல்கள் அனுப்பப்பட்டதால் பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்குப் பிறகு இடைக்கால கடமைகளை ஏற்க துணை ஜனாதிபதி முகமது மொக்பரை நியமித்திருக்கிறார். அந்நாட்டு அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி நிர்வாகக் கிளையை வழிநடத்தும் பொறுப்பில் மொக்பர் இருக்கிறார் என்று ெகாமேனி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 50 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹி மரணமடைந்ததையடுத்து ஈரான் அமைச்சரவை துணை வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனியை ஈரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளது.
மோசமான வானிலை இருந்தபோதிலும் ஈரான் ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவை நாட்டின் வடமேற்குப் பகுதியில் ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போன இடத்தைக் கண்டறிய மீட்புப் பணியாளர்கள் 24 மணி நேரமும் முயன்றனர்.
மூடுபனி மற்றும் மழைக் காலநிலையையும் பொருட்படுத்தாமல் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் வர்சகான் நகருக்கு அருகிலுள்ள பாறைகள் நிறைந்த பகுதி மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பை ஆயுதப் படைகள் உட்பட மீட்புக் குழுக்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டன.
துருக்கிய ட்ரோன் ஆளில்லா விமானம் மூலம் சம்பவம் நிகழ்ந்த இடம் அடையாளம் காணப்பட்டது. அஜர்பைஜான் குடியரசுடனான ஈரானின் எல்லையில் ஒரு அணையைத் திறப்பதற்கான விழாவில் இருந்து ஜனாதிபதி ரைசி வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் பலருடன் திரும்பிக் கொண்டிருந்தார் பேதே ஞாயிற்றுக்கிழமை வர்சகான் பகுதியில் தரையிறங்கிய போதே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. எவ்வாறு இருப்பினும் விபத்துக்கான உத்தரியோகபுர்வ காரணத்தை ஈரான; இதுவரை வெளியிடவில்லை.
2021 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ரைசி ஈரான் இஸ்லாமிய குடியரசின் எட்டாவது ஜனாதிபதியாக பணியாற்றினார்.
இப்ராஹிம் ரைசிக்கு 63 வயது என்பதும் குறிப்படத்தக்கது.
ஈரானின் ஜனாதிபதி மறைவுக்கு உலக மற்றும் பிராந்திய தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர். லெபனானிலும் 3 நாட்கள் துக்கம் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்த ரைசி மற்றும் பிறரின் மரணத்திற்கு லெபனானின் தற்காலிக பிரதமர் நஜிப் மகதி மூன்று நாட்களுக்கு துக்க தினத்தை அறிவித்துள்ளார்.
இலங்கையிலும் நாளைய தினம் துக்கதினமாக அறிவிக்கப்பட்டடுள்ளது.
முதல் அதிகாரப்பூர்வ அரச இறுதிகிரியைகள் நாளை தப்ரிஸ; நகரில் நடைபெறும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. அதன் பிறகு. உடல்கள் ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மாநில உயரதிகாரிகள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.
பின்னர் இரண்டு காரணங்களுக்காக உடல்கள் மஸ்ஹத் நகருக்கு மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது: ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சொந்த ஊராகவும் அங்கு பிறந்து வளர்ந்தது மற்றும் அவரது அரசியல் வாழ்க்கை அங்கு தொடங்கியதாலும் அதேபோல ஈரானின் மிக முக்கியமான மத மையமாக மஸ்ஹத் நகரம் இருப்பதாலும் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் கொண்டுசெல்லப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஸ்ஹத் நகரத்தில் அரச கௌரவத்தோடு அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By: Sarifudeen Zahran (Journalist)