சீனாவின் கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ESMC) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 35 கிலோமீட்டர் (21.75 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கத்தின் மையம் சீனாவின் லான்ஜோவிலிருந்து மேற்கு-தென்மேற்காக 102 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகிவில்லை.