இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த கட்சித் தலைவராக நியமிக்கப்படும் நபரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா ஆகிய இருவரும் அடுத்த வருடம் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ள பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் மற்றும் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோருக்கிடையில் தலைமைத்துவத்திற்கான முக்கோணப் போட்டி குழப்பமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
2024 ஜனவரியில் வவுனியாவில் நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்தில் புதிய ITAK கட்சியின் தலைவர் அறிவிக்கப்பட உள்ளார் .