பாராளுமன்ற முறைமை தொடர்பில் ஸம் ஸம் (Zam Zam) நிறுவனத்தின் பயிலுனர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு நேற்று (09) அதன் பிரதான அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸம் ஸம் நிறுவனத்தின் கீழ் கல்வி கற்கும் பயிலுனர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டதுடன், இதன் மூலம் பாராளுமன்ற வரலாறு, பாராளுமன்றத்தின் பணிகள், பாராளுமன்ற மரபுகள், பெண்களின் பிரதிநிதித்துவம், அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் பாராளுமன்ற டிஜிட்டல் ஊடக அணுகல் தொடர்பில் அவர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொது வெளிக்கள சேவைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட இந்த செயலமர்வில் இரண்டாம் கட்டமாக பாராளுமன்றத்தினுள் இடம்பெறும் செயன்முறை தொடர்பில் பிரயோக ரீதியான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.