தெற்கு ஜெர்மனியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலைங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இதனால் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்துடன் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அங்கு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த பல போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவற்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் உள்ள மக்கள் கடந்த சில நாட்களாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.