பிரித்தானியா அரசாங்கம் முக்கிய நடவடிக்கையாக குடியேற்றத்தைக் குறைக்கும் வகையில் “தீவிர கட்டுப்பாடுகளை” அறிவித்துள்ளது.
இதில் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரித்தானியாவில் பணிபுரிய விசா பெற விரும்பினால் அவர்கள் சம்பாதிக்க வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவது உட்பட பல நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி 2022ஆம் ஆண்டில் பிரித்தானியாவிற்கான நிகர இடம்பெயர்வு 7,45,000 ஆக உயர்ந்ததை அடுத்து பிரதமர் ரிஷி சுனக் மீது கடும் அழுத்தங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், குடியேற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் இங்கிலாந்துக்கு நன்மை பயக்கும்” என்று பிரதமர் ரிஷி சுனக் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
முதுகலை ஆராய்ச்சிப் பட்டம் பெற்றிருந்தால் தவிர, வெளிநாட்டு மாணவர்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதைத் தடை செய்தல் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சம்பள வரம்பை 38,000 பவுண்களாக உயர்த்துவது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
இதன்படி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் 38,700 பவுண்டுகள் சம்பாதிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.
இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைமுறைக்கு வரும் என உள்துறைச் செயலாளர் பாராளுமன்றத்தில் தனது திட்டங்களை முன்வைத்தபோது வலியுறுத்தியிருந்தார்.
“புதிய குடியேற்றத் திட்டம் மூலம், நிகர குடியேற்றத்தை தீர்க்கமாக குறைத்து, பிரித்தானிய மக்களுக்காக வேலை செய்யும் அமைப்பை உருவாக்குவோம்” என்று உள்துறை அலுவலகம்தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய திட்டங்கள்
1. குடும்பத்தைச் சார்ந்தவர்களைக் கொண்டு வரும் வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்களை நிறுத்துதல் மற்றும் விசாவுக்கு நிதியுதவி செய்ய இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு நிறுவனங்கள் பராமரிப்புத் தர ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
2024-25க்குள் இதன் ஊடாக வருகையை 20 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைப்பதன் மூலம் இந்த மாற்றம் மதிப்பிடப்பட்டுள்ளது.
2. இந்த வகையான வேலைகளுக்கான சராசரி முழுநேர ஊதியத்திற்கு ஏற்ப, திறமையான தொழிலாளர் வழியைப் பயன்படுத்துபவர்களுக்கு அடுத்த வசந்த காலத்தில் இருந்து 38,700 பவுண்டுகளாக வருமான வரம்பை உயர்த்துதல்.
3. வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களை குறைத்து, தொழிலாளர்கள் பற்றாக்குறையாக உள்ள தொழில்களுக்கான 20 சதவீத ஊதிய தள்ளுபடியை முடிவுக்கு கொண்டு வந்து, தொழில் பற்றாக்குறை பட்டியலை சீர்திருத்துதல்.
4. குடும்ப விசாக்களுக்கான குறைந்தபட்ச வருவாயை 38,700 பவுண்டுகளாக உயர்த்துதல், திறமையான தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள வரம்புக்கு சமமான அதே வரம்பு.
5. மாணவர்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதற்கான விதிகளை கடுமையாக்குதல். இடம்பெயர்வு ஆலோசனைக் குழு பட்டதாரி வழியையும் மதிப்பாய்வு செய்யும்.
குடியேற்ற நடவடிக்கை பிரித்தானியாவில் நீண்டகால் பிரச்சினையாக இருந்து வருகின்றது. அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் முக்கிய விடயமாக இதனை அரசியல் கட்சிகள் கையாளும் என தெரிவிக்கப்படுகின்றது.
2020 ஜனவரியில் பிரித்தானியா முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதில் இருந்து சட்டப்பூர்வ இடம்பெயர்வு அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் நிகர இடம்பெயர்வு 488,000 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.